வாக்காளப் பெருமக்களே!!!
- gdkarti
- Apr 6, 2019
- 5 min read
Updated: Dec 11, 2021
The political climate in TamilNadu has changed (!) worsened a lot since my last blog out in September 2017. I would like to start off with a prelude to certain events that I missed during this hiatus.
First, my sincere condolences to the people of TN and the DMK cadres on the passing of Dr. Karunanithi, former CM of TN, an ardent Dravidian ideologist. All his reformative works towards social justice and equality will be remembered and cherished. Rest in Peace Kalaignar.
Second, I appreciate the supreme court of India for the historical declaration of section 377. I never thought that this would happen so early in this country that talks cultural values often times.
Commends to director Mari Selvaraj and Pa. Ranjith for giving us "Pariyerum Perumal". I still consider movies as a medium and that anyone has the freedom to express their ideologies through that medium.
Let us all stand with the families of Pulwama martyrs. Let us urge the ruling NDA government to release more details and proof for their claims on retaliation.
----------------------------x------------------x--------------------------------
Ever since the announcement on the parliamentary election dates and phases made, the whole of India is in election fever. The two predominant national parties INC (Indian National Congress) and BJP (Bharatiya Janata Party) are working hard to pull the regional parties across the states to their alliances namely UPA (Union Progressive Alliance) and NDA (National Democratic Alliance) respectively. Unlike any other elections before, this time the media is focusing more on the regional parties simply because the people lost their hopes on both the national parties. In addition the regional parties took initial steps later this January to form a third front against the former national parties. Despite all the initial efforts, the situation has switched back to INC vs BJP as of April 2019. Most of the regional parties changed their mindset and signed the MOU for the coalition with one of the national parties again. While the local and the national media started discussing their predictions and/or conducting pre-poll surveys across the country I thought of sharing some interesting facts about the TamilNadu regional parties.
This blog is about "How dravidian parties came to power and do they still sustain it?"
As a quick note, this blog is about DMK and ADMK the two major regional parties of TamilNadu. The data collected from the election commission of India site are used solely to critic the performance of the parties. The data collected from the EIC are as follows
1) Number of votes acquired by the parties (DMK and ADMK) since 1991
2) Number of constituencies contested by the parties (excluding the coalition) since 1991
3) Percentage of total votes acquired by the parties since 1991
2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 5.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 1.8 கோடி புதிய வாக்காளர்கள், அதில் ஏறத்தாழ 90% பேர் இளைஞர்கள், 95% பேர் முதல் தலை வாக்காளர்கள். இவர்கள் வாக்கு யாருக்கு?
2014ல் மொத்தமுள்ள 4.06 கோடி வாக்காளர்களில் சுமார் 1.7 கோடி வாக்குகளைக் குவித்து 37 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அதிமுக அனுப்பியது. இது ஒரு milestone என்றே கூறலாம். இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் அதுவரை நாடாளுமன்ற தேர்தலில் 1 கோடி வாக்காளர்களை பெற்றிருக்கவில்லை. இந்த அசுர வெற்றியால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக மாறியது, தம்பிதுரை Loksabha துணை சபாநாயகர் ஆனார். 2014 வெற்றியைத் தொடர்ந்து அதிமுக 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்றே ஜெயலலிதா முழங்கி வந்தார். அந்த முழக்கம் இந்த முறை மீண்டும் நிரூபணமாகுமா?
சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன், இரட்டை இலையைத் தேடி வாக்கிடும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை. இந்த trend ஐ மாற்றியது யார்?
(கீழுள்ள அட்டவணையில் இருந்து)

1991இல் மொத்தமுள்ள 2.4 கோடி வாக்காளர்களில் சுமார் 36% (89 இலட்சம்)பேர் வாக்களிக்கவில்லை. அப்போது திமுக பெற்ற வாக்குகள் (22.69%) 56 இலட்சம், அதிமுக (18.1%)44 இலட்சம் வாக்குகள் பெற்றது. மக்கள் அப்போது திராவிட கழகங்கள் இந்திய அளவில் மாற்றங்களை கொண்டு வர இயலாது என்றே கருதினர் போலும்.

1996 இல் நடந்த தேர்தலில் திமுக 69 (26%) இலட்சம் வாக்குகளையும் அதிமுக (8%) 21 இலட்சம் வாக்குகளையும் பெற்றன. இம்முறையும் மொத்தமுள்ள 2.7 கோடி வாக்காளர்களில் 90 இலட்சம் மக்கள் வாக்களிக்கவில்லை.

பின்னர் ஆட்சி கலைந்து 1998 இல் மீண்டும் தேர்தல் நடந்தது. அதில் 1 கோடி (42%) வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை, காரணம் நிரந்தர கூட்டணி ஏதும் அமையவில்லை. அந்த தேர்தலில் திமுக 51 இலட்சம் வாக்குகள் பெற்றது. அதிமுக முதல் முறையாக 66 இலட்சம் வாக்குகள் பெற்றது.

இரண்டாம் முறையாக மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த முறை ஓராண்டில் கலைந்தது. மக்கள் ஓட்டு போட்டே சோர்வுற்றனர். மீண்டும் (42%) 1.1 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை. திமு கழகம் 62 இலட்சம் வாக்குகளையும் அதிமுக 69 இலட்சம் வாக்குகளையும் பெற்றன.
1991 முதல் 1999 வரை காங்கிரஸ் கட்சிக்கு தேய்பிறை போலும். நாடாளுமன்ற தேர்தலில் மறக்காமல் கை சின்னத்தில் வாக்களித்த மக்கள் மெல்ல மெல்ல கழகங்கள் பக்கம் சரிந்தனர். நிலையான கூட்டணி அமையாமை, கூட்டணி அமைக்க கட்சி தாவுதல், ஸ்திரமான தலைவர் இல்லாமை, உட்கட்சி பூசல், கோஷ்டி அரசியல் என கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேய்ந்தது. இந்த சூழலை கவனமாக திராவிட கட்சிகள் கையாண்டது. திராவிட கட்சிகள் பொது மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளைச் செய்தது. தேசிய கட்சிகள் தனிப்பெரும்பான்மையை பெறாத நிலையில் நடுவணரசில் ஆட்சி பங்கு கேட்காத குறை தான். தமிழகத்தில் இருந்து ஆதரவு வேண்டுமெனில் அமைச்சரவையில் தங்கள் கட்சிகள் இடம் பெற வேண்டும் என திமு கழகம் பின்னாளில் காங்கிரஸை மிரட்டுமளவு வளர்ந்தது. இந்த மிரட்டல் தொனி மக்களுக்கு திராவிட கட்சிகள் மீது நம்பிக்கையை உருவாக்கியது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் 33 தொகுதியில் போட்டியிட்டு 85 (30%) இலட்சம் வாக்குகள் பெற்ற அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. 70 (25%) இலட்சம் வாக்குகள் பெற்ற திமுக போட்டியிட்ட 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. கருணாநிதி ஒரு ராஜதந்திரி என்று நிரூபித்த தேர்தல் அது. அதிமுகவை விட வாக்குகள் குறைவாக பெற்ற போதும் திமு கட்சியில் இருந்து அமைச்சரவை இடம் கேட்டு பெற்றார். பின்னாளில் ஜெயலலிதா வியூகம் வகுக்க இந்த தோல்வி பாடம் புகுட்டியது.

2009 தேர்தலில் மொத்தமுள்ள 4 கோடி மக்களில் 26% (81 இலட்சம்) மக்கள் மட்டுமே வாக்களிக்கவில்லை . 1999 இல் 42% (1 கோடி) பேராக இருந்த எண்ணிக்கை குறைந்தது. காரணம் திராவிட கழகங்கள் செய்த உட்கட்டமைப்பு. மக்களிடம் regional parties நடுவணரசில் பங்கு பெற முடியும் என நம்பிக்கை ஏற்படுத்திய யுக்தி. திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் இதுவே. 2000திற்கு பிறகு தேசிய கட்சிகளை கிள்ளுக் கீரையாகவே பயன்படுத்தின திராவிட கட்சிகள். வெறும் 10-15 இடங்கள் மட்டும் பெற்று கொண்டு களங்கண்டன தேசியக் கட்சிகள். அண்ணாவின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கொள்கையை இரண்டு திராவிட கட்சிகளும் கையாண்டது. (Kudos dravidian parties)

2004 கருணாநிதி நிரூபித்த தேர்தல் என்றால் 2014 தேர்தல் ஜெயலலிதா நிரூபித்த தேர்தல். 1996 முதல் அதிமுக 25 தொகுதிக்கு குறைவாக போட்டியிட்டதில்லை. காரணம் ஜெயலலிதா ஒரு mass populist politician. அவருக்கு வெற்றி தோல்வியைவிட குறிப்பிட்ட % வாக்குகளை பெற வேண்டும் என்றே எண்ணினார். ஜெயலலிதா திமுகவை "minority" திமுக என்றே அழைத்து வர அவர் செய்த mass populist politics தான் காரணம். எப்போதும் அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று வந்தார் ஜெயலலிதா.

திமு கழகம் 1991 முதல் 2009 வரை 19, 16, 22 என்று கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து பழக்கப்பட்ட கட்சி. அதனால் அவர்களால் ஜெ போல வாக்கு அரசியல் பேச முடியாது. அதிமுக தொடர் தோல்விகளை பெற்றாலும் திமு கழகத்தை விட அதிக வாக்குகளை பெற்று வந்தது. 2014 இல் தனித்து களங்கண்ட திமு அதிமு கழகங்கள் புரட்சி செய்தன. அதிமுக 1 கோடி வாக்குகளையும் திமுக 95 இலட்சம் வாக்குகளையும் பெற்று மாற்று கட்சிகளை விரல் சூ*** செய்தது. நடுங்கிப்போயின தேசிய கட்சிகள்.
ஆக 1991 முதல் 2014 வரை நடந்த தேர்தலில் திமு அதிமு கழகங்கள் தங்களை நன்றாக பலப்படுத்திக் கொண்டன. இந்த தைரியத்தில் தான் ஒற்றை இலக்க தொகுதிப் பங்கீட்டை தேசிய கட்சிகளுக்கு பேரமாக வைக்கின்றன திராவிட கட்சிகள். பாஜகவிற்கு 5 காங்கிரஸுக்கு 9 என தேசிய கட்சிகள் சுருங்கிப் போயின.
இதில் பாராட்ட வேண்டிய விடயம் என்னவென்றால் திமு அதிமு கழகங்கள் தங்கள் தலைமையை இழந்த பிறகும் தேசிய கட்சிகளை அதன் நிலை மாறாது treat செய்யும் விதம். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தும் ஸ்டாலின், ஈபிஎஸ் ஓபிஎஸ் அதிக இடங்களை விட்டுக் கொடுக்கவில்லை. திராவிட கட்சிகள் ஏன் கில்லி என்றால் 5,9 என ஒதுக்கப்பட்ட ஒற்றை இலக்க தொகுதி பங்கீடே சாட்சி. நாம் தமிழர், மய்யம் என பல்வேறு புதிய கட்சிகளை சட்டை செய்யாமல் தொடர்ந்து செயல்படும் விதம், காலையில் கண்டித்த கட்சிகளை மாலையில் தொகுதி பங்கீடு பேச மண்டியிட வைத்த விதம் என திராவிட கட்சிகள் இந்த தேர்தலிலும் rocking.
அது சரி அந்த 2014 வாக்கு வங்கி என்னவாகும்?
இந்த முறை நம்முடைய கணிப்பு எந்தவொரு கட்சிக்கும் 1 கோடி வாக்குகள் கிடைக்காது என்பதே. தலா 20 தொகுதியில் போட்டியிடும் கழகங்கள் சென்ற 2014இல் பெற்ற வாக்குகளை பெறுவது அரிது. திமுக வால் 1 கோடி வாக்காளர்கள் பெற்ற கட்சியென பெயரெடுக்க இயலாதென்றால் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமென்கிற statusஐ அதிமுக இழக்கவும் நேரிடும்.

சரி மாற்று அரசியல் பேசும் புதிய கட்சிகளின் நிலையென்ன?
2016 சட்டமன்றத் தேர்தலில் 1.5 கோடி புதிய வாக்காளர்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று களம் கண்ட மக்கள் நலக் கூட்டணியை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. அவர்களால்1.5 கோடியில் 15% வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. அதன்படி பார்த்தால் 1.5 கோடி இளைஞர்கள் மாற்றத்தை விரும்பவில்லையா? கழகங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று மூன்றாமணி அமைத்த தலைவர்கள் கணிப்பு தவறா? புதிய அரசியல் பேசி மக்களை மடைமாற்றம் செய்ய இயலாதா? மக்கள் திராவிட கொள்கையில் ஊரிவிட்டனரா?
தொடர்ந்து பேசுவோம்.....
#சயோ_நாரா
Comments