இது ஜனநாயக உரிமையா ?? !!!!
- gdkarti
- Oct 20, 2015
- 3 min read
#நடிகர் சங்கத் தேர்தல்,பாண்டவர் அணி அமோக வெற்றி!!! #அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஃபேஸ்புக் அலுவலகத்தில் கண் கலங்கினார் !!! #பிரபல புலி நடிகர் வருமான வரி ஏய்ப்பு ரசிகர்கள் அதிர்ச்சி!!! #விடாமல் கலாய்த்த நெட்டிசன்களை காவல்துறையினரிடம் புகார் கொடுத்து வம்படியாக எதிரிகளை உசுப்பேத்திய நடிகர்!! முன்பைவிட இப்ப அதிகமா கலாய்க்கிராய்ங்க - ரசிகர்களுடன் நடிகர் கண்ணீர் பேட்டி !!! #நன்றி மறந்த கமல் #மௌனம் காக்கும் ரஜினி #நமக்கு நாமே மக்கள் பணி ஸ்டாலினும் காக்காமுட்டையும் # "மக்களுக்காக மக்கள் பணி " கூட்டத்தில் கதறும் விஜயகாந்த் #"நாங்களும் போய் சந்திப்போம்ல" என வாடகை சைக்கிளுக்கு பெட்ரோல் காசு வாங்கிக்கொண்டு ஊர் ஊராக சுற்றி வரும் பா.மா.க, தா.மா.க!!! #மக்கள் எங்கள் பக்கம் என மனக்கணக்கு போடும் "மக்கள் நலக் கூட்டணி " டெபாசிட் மிஞ்சுமா?? #சம்பள கமிஷன் ஆர்வத்தில் அதிகாரவர்க்கம்-இனி இடது கையை யூஸ் பண்ணவே மாட்டோம் என நம்பிக்கை !!!! #நாட்டு மக்கள் சகிப்புத் தன்மையை இழக்கக் கூடாது -பிரணப் முகர்ஜி- "இதுக்கு மேலயுமா சகிப்பு தன்மை வேனும்" என வருத்தெடுக்கும் ஆன்லைன் வாசிகள் !!!!
இப்படியாக விறுவிறு சுறுசுறு நியூஸ் கேட்டே பழகிட்டோம்!!!
"கோவையில் பொறியியல் மாணவர் கண்டுபிடித்த ... (சேனல் மாற்றப்பட்டது) !!!! சரி டிவில இப்படினா பேப்பர்ல எட்டாவது பக்கத்துல கடைசி காலத்துல அந்த மாணவனோட சாதனை நியூஸ் வருது!!! சரி முதல் பக்க சேதி என்னனு பாத்தா "பாண்டவர் அணி அமோக வெற்றி " யாம் !!! என்னய்யா இது???
இதொல்லாம் பழசு தான்!!! மக்களுக்கு பத்திரிகைகள் மீது எரிச்சல் வரக் காரணம் அதுல வரும் செய்திககளும் அதன் தரமும் தான்னு, அதுக்காக பத்திரிகை ஆசிரியர் தரும் உப்புசப்பில்லாத காரணம் "இப்பலாம் இந்த மாதிரி செய்தி போட்டாதான் பேப்பர் விக்கிது இல்லனா எல்லா டிவிலயும் ஆன்லைன்லயும் பாத்துகராங்க" #படுகேவலம்
ஒரு பத்திரிகையானது செய்தி அனைவருக்கும் சென்றடைய காரணியா இல்ல அதிக லாபம் ஈட்டி தர வியாபாரமா??? சரி அதுதான் கழிஷடையா இருக்குனா ஆன்லைன் நியூஸ் இருக்கே படிச்சவங்களாவது பாப்பாங்கனு நினைச்சு போனா இன்னும் மோசம்!!! ஒரு order of precedence இல்லாம கொச்ச கொச்சனு இதுல Refresh பன்னினா ஆபாச லிங்க்ஸ் முதலில் மொய்க்குது !!! அது சரி எதுக்காக அதிகமா பயன்படுத்துறோமோ அதானே அதிகமா இருக்கும் !!! டிவில சீரியல் பிரேக்ல நியூஸ் போடலாம் னு டிவி டைரக்ட்ர் யோசிக்க காரணம் நாம் தானே !!! நியூஸ் பிரேக்ல தான் இன்னைக்கும் பல குடும்பங்கள் சாப்பிடுறாங்க!!! #என்னத்த சொல்ல?? இவங்க சாப்பிடனும்னு அந்த சானல்ல முடிவு பண்ணி அரை மணி நேர ரெஸ்ட் விடுறாங்க !!! 24 மணி நேர நியூஸ் சானலா ?? அய்யோ எப்ப பாத்தாலும் இரண்டு கட்சிக்காரன கூப்பிட்டு நய்யாண்டி தர்பார் தான் எப்பவும்!!! இல்லன்னா ஸ்பாட் நியூஸ்னு சொல்லி நடந்த இடத்துக்கு போய் அங்க பரபரப்பான சூழல்ல விளையாட்டு காட்ட வேண்டியது !!! #ச்சே
அய்யா "media is something that reflects ourselves" இத புரிந்து நடந்து கொள்ள at least முயற்சி எடுங்க !!! இன்னைக்கு எத்தனை முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்குனு மீடியா சொல்லி தான் நாம தெரிஞ்சிக்கிறோம் !!! அப்படி இருக்க ஒரு நாட்டு மக்களுக்கு இத்துணை பெரிய சேவை செய்ய வேண்டிய ஊடகம் எத்துணை கவனமாக இருக்கனும்??
சாரே நாம தான் இதுக்கு பொறுப்பு !!!! நாம எதிர்பாக்குற மாதிரி நியூஸ் இல்லனா மாத்திடுறோம்!!! அதுக்காக மீடியாவும் நம்மள தெரிஞ்சிட்டு நமக்கேத்த நியூஸ் சொல்றான்!!!
"மோடி அமெரிக்கா சென்று 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு ரானுவ ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் "ங்கற செய்திய விட ஃபேஸ்புக் அலுவலகத்துல அழுத நியூஸ் தானே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு ஆசானே??
நடிகர் சங்க தேர்தல் ஒரு விஷயமா ??? மொத்தமா 3000 சொச்ச ஓட்டு!!! அதல போய் ஒரு நாள் முழுக்க கவரேஜ் செய்ய என்ன இருக்கு??? சட்ட மன்ற தேர்தலா இல்ல நாடாளுமன்ற தேர்தலா ?? ஊர் உலகத்துல வேற ஏதும் சேதி இல்லையா ??உங்க டி.ஆர்.பி. காக மக்கள ஏமாத்துறீங்களே என்னா வாத்தியாரே ??
நடிகர் சங்க தேர்தல் அன்று தான் ஜெர்மனி அதிபர் நம் நாட்டிற்கு வந்தார்னு சொன்னா எத்தனை பேருக்கு தெரியும் ?? எதுக்கு வந்தார் ?? (அது வேற விஷயம் BRICS ல இருந்து இந்தியாவ பிரிச்சி தனியா தான் தெடங்கவிருக்கும் புதிய பன்னாட்டு அமைப்பில் சேர்க்க வாய்ப்பு இருக்கா என வேவு பார்க்க வந்ததாக துக்ளக் கூறுகிறது )
இந்த லட்சனத்துல நம்ம மீடியா இருக்கதால தான் "satellite partsஆ bullock cart ல கொண்டு போன ஊராச்சே"னு வெளிநாட்டு பத்திரிகை கார்ட்டூன் வெளியிடுறான் !!! அதுசரி அங்க அந்த பத்திரிகைகள ஆதரிக்க மக்கள் இருக்காங்க அரசாங்கம் இருக்கு!!!! நாம இதற்கு எதிராக எதுவும் பன்னிவிட முடியாது!!!நம்ம நாட்டு ஊடகம் என்ன செய்துவிட போகுதுனு ஏளனம் !!!
இங்க அது மாதிரி ஒரு நியூஸ் வந்திருக்கா??? பாகிஸ்தான் கூட இந்தியர்களை கேலிக்கை செய்ய ஆரம்பிச்சாசு ஆனா இங்க நமக்கு பக்கத்து வீட்டுகாரன் வாங்கின LED டிவி தான் பெரிய நியூஸ் !!! நாம இப்படி இருந்தா நம்மள reflect பன்ற மீடியா எப்படி இருக்கும் ??? வெளிநாட்டு பத்திரிகை எழுதறத குத்தம் சொல்ல விரும்பல!!! அதுக்காக நம்ம பத்திரிகைகள் கொடுக்கற பதிலடிக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா??? நாம துணிகரம மீடியாக்களுக்கு சப்போர்ட் பன்னா தானே அவங்க தலையங்கத்துல பதிலடி கொடுப்பாங்க?? இல்லனா வழக்கம் போல மாமியார் மருமகள் சண்டை தான் தலைவகிக்கும்!!!
அய்யா மீடியா காரங்களே நீங்கள் தான் நாட்டின் பிரதிபலிப்பு !!! அதற்காகத் தான் ஜனநாயக நாட்டில் உங்களுக்கான உரிமை ஏராளம் தாராளம்!!! Press என்றவுடன் மக்கள் தரும் மரியாதையும் புரிந்து செயல்பட்டால் நனிநன்று!!! உங்களை நம்பித்தான் அரசாங்கம் !!! நீங்கள் நினைத்தால் அரசைக் காக்கவும் முடியும் !!! கவிழ்க்கவும் முடியும் !!! மக்களுக்கு சேவை என எண்ணி செயல்படுங்கள் !!! அவ்வாறு நடக்கும் போது லாபம் துச்சமாகத் தெரியும் !!! பொது ஜனத்துக்கு எது முக்கிய செய்தி என நீங்கள் நன்றாக அறிவீர்கள் !!! மனசாட்சிக்கு தெரிந்த அதை கொஞ்சம் விசாலமாக, அதிக மையுடன் எழுதித்தான் பாருங்களேன் !!!!! தேசத்திற்கு செய்யும் சேவை என மெய் சிலிர்க்கும்!!!!

இறுதியாக என் போன்ற மக்களே!!! படம்,பாட்டு,நியூஸ் னு எல்லாத்துலயும் மசாலா எதிர்பார்த்தா பின்ன காரம் தாங்காம வயிறு கிழிஞ்சிடும்யா!!! எது முக்கியம் னு தெரிஞ்சி செயல்படுங்கோள் எம்மக்கோள்!!! _/\_
Social media பற்றிய அடுத்த bloggerல சந்திப்போம் !!!! நன்றி _/|\_
#sayo_nara!!!
Comments