top of page
Search

POLITI(E)CS !!!

  • gdkarti
  • Apr 6, 2016
  • 6 min read

வாக்காளர் ஜாக்கிரதை

எவ்வளவு தான் BLOGS எழுதினாலும் அதீத ஆர்வமும் அதிக referenceகளும் கூடவே நாவடக்கமும் சேர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விடயம் அரசியல் சார்ந்த BLOGக்கு தேவைனு உணர்ந்து பொறுமையா 2 மாசங்கழிச்சு நடக்கறத உன்னிப்பா கவனிச்சு இதனை வெளியிடுகிறேன்.

இந்த blogஐ புதுப்பிக்கப்பட்டு கொண்டிருந்த அதே நேரத்தில் தான் அம்மா தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி ஆதரவு திரட்ட ஆரம்பித்தார்!!! மநகூ ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கி செல்கின்றது. கலைஞர் எங்கே எப்போது ஆரம்பம் செய்வார் என தெரியாத நிலை!!!! கண்,மனம் கவரும் தேர்தல் அறிக்கை கூட வெளியிட்டுவிட்டார். பாஜக விழிபிதிங்கி தனித்து விடப்பட்டுள்ளது. மறுபுறம் பாமக தனியே உள்ளது. வெள்ளம் ஏற்பட்ட போது சீறிப்பாய்ந்த மருத்துவர் இப்போது சத்தமின்றி அரசியல் செய்கிறார். புதிய தமிழகம் திமுகவில் செட்டில்டு. சமத்துவ மக்கள் கட்சி அஇஅதிமுகவில் ஐக்கியமானது. ஆளுக்கொன்றென முஸ்லீம் லீக் திராவிட கட்சிகளை பற்றிக் கொண்டது. வாசன் விலை போகா ஆடு போல் தவிக்கின்றார்.இதர சிறிய கட்சிகள் அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன. தேமுதிக பற்றியோ விஜயகாந்த் பற்றியே நான் பேச விரும்பவில்லை.

ஆரம்பமே விஜயகாந்தை தூற்றுவதை எண்ணி ஐயம் வேண்டாம் ஏனெனில் அவருடைய கட்சியை ஆரம்ப காலத்தில் பெரிதும் ஆதரித்து பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் கூட்டணிக் கேளிக்கைகளும் கட்சிக்குள் குடும்ப ஆதிக்கம் கொண்டு வந்ந செயலும் எங்கே மற்றுமொரு திராவிட முன்னேற்ற கழகத்தை நாட்டிடுவாறோ என அச்சத்தை ஏற்படுத்தியது. கொள்கை இல்லை என்ற போதும் கூட ஆதரித்தேன் கேப்டன் அவர்களே உங்கள் மீது வெறுப்பு வரக்கூடிய காரணம் ஒன்றிரண்டு இல்லை. எந்நேரமும் சதா குடி என உங்களை கூறினார்கள் நான் நம்பவில்லை ஆனால் சாதாரண மனிதனாக உங்கள் பேச்சை கேட்டாலே அது உன்மை என விளங்கும். போகும் இடமெல்லாம் உலறிக் கொட்டுனீர்கள். எதிர்கட்சித் தலைவர் பதவியானது எத்துனை முக்கியமான பதவி அதை பயன்படுத்தினீர்களா?? 110ஐ கூறி ஆதாயம் தேடமாட்டீர்கள் என எண்ணினேன் ஆனால் ஸ்டாலின் கூறும் அதே காரணங்களைக் கூறி உங்களை உத்தமராக காட்டிக் கொண்டீர்கள் .உன்மையில் அந்த தருணத்தில் தான் உங்கள் மீது ஏமாற்றங்கள் தோன்ற ஆரம்பமானது. என்னதான் இருந்தாலும் மீடியாவை உமிழ்ந்த நீங்கள் எந்த ஞாபகத்தில் அவ்வாறு செய்தீர்களென தெரியவில்லை அதன் விளைவு என்ன என நான் நன்கு அறிவேன் நீங்களும் ஒரு சேனல் நடத்துகிறீர்கள் அதுவும் மீடியா என்பதை அறியாமல் மதிமயக்கம் கொண்டுவிட்டீர்கள் போலும். நீங்கள் ஆழ்ந்து யோசித்து சேர்ந்த கூட்டணியில் உங்களை பேசவிடவில்லை ஏன் தெரியுமா நீங்கள் பேசினால் ஓட்டு விழாது .இதை மேடைக்கு மேடை தீவிர பேச்சில் உங்கள் கட்சியை காப்பாத்தும் உங்கள் மனைவியாரும் தெரிந்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரான உங்களை பேசவிடாமல் பொம்மையாக்கி மற்றவர்கள் பேசி முதல்வராக்குகின்ற கூத்து இங்குதான் நடக்கிறது. நாளை நீங்கள் முதவ்வராகி மாநிலத்தின் பிரச்சனையை எப்படி டெல்லிக்கு சென்று முன் வைப்பீர்கள்?? வைகோவை உடன் கூட்டிச் செல்வீரா?? விஜயகாந்த் நியாயவாதி வெகுளி என்றெல்லாம் சமூக தளங்களில் கூறிக் கொள்கின்றனர். கமுக்கமாக 4 கட்சியிடம் அரசியல் பேரம் பேசுகிறீரகள். நீங்கள் வெகுளியானவரா?? அப்போதும் நான் உங்களை மாற்றாகவே கருதினேன். ஆனால் என்று ஆட்சி பங்கும் முதல்வர் பதவிக்காகவும் பேரம் பேசத் தொடங்கினீர்களோ அன்று கடைசி கட்ட ஆதரவு மனப்பான்மை உடைந்து போனது. மன்னியுங்கள் கேப்டன் அவர்களே உங்களுக்குத் தேவை ஒரு இடைக்கால ஓய்வு . ஒரே நேரத்தில் பாஜக திமுக மநகூ என உங்களை வளை வீச நீங்களும் நாம் தான் தமிழகம் என தப்பு கணக்கு போட்டுவிட்டீர்கள். உங்கள் எண்ணம் என்னவோ மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது தான் என அறிந்திருந்த எனக்கு உங்கள் கட்சியில் அதே எண்ணம் கொண்ட எத்துனை பேர் உள்ளனர் என எண்ணியபோது பேச வாய்வரவில்லை. முதலில் குடும்ப பாங்கான கட்டினை உங்கள் கட்சியில் இருந்து எடுத்துவிடுங்கள். பின் கட்சியை வளர்த்தெடுக்க வழிவகுத்து பின்பு தேர்தல் களம் வாருங்கள் தனித்தே வாருங்கள் எனது ஓட்டு உங்களுக்கே. வாழ்த்துக்கள்!!

அடுத்து

நானே திராவிடன் எனது கட்சியே திராவிடர் கட்சி எனக் கூறி பலபேருக்கு ஒரு புது நம்பிக்கை புகட்டி இத்தனை ஆண்டு காலம் வெளி அரசியல் செய்யும் வைகோ அவர்களே. 23 ஆண்டுகளாக நீங்கள் அடைய வேண்டிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெறுவீர்கள் என எதிர் பார்த்தேன் ஆனால் முடிவோ உங்கள் அரசியல் ஆதாரத்தை பதம் பார்த்த தேர்தல் ஆக மாறியது அதை எண்ணி பயந்துபோனேன். ஆனால் சற்றும் தயங்காது மநகூ வை ஒருங்கினைத்து என் அரசியல் ஹீரோவாக மாறினீர்கள். கொள்கைகளை கொள்ளையிலுட்டு அண்ணாவின் விளக்கத்தை தந்து நாங்களே மாற்றணி என நிமிர்ந்து நின்ற தருணங்களில் அரன்டன திராவிட கட்சிகள். இன்னும் உச்சிக்கு சென்றீர்கள். அந்த கூட்டணி தேராது என நகைத்த அத்தனை பேரின் முகத்திலும் கரி அடித்தாற் போல் இது நாள் வரை கட்டிக் காத்துக் கொண்டு வருகுறீர்கள். ஆங்காங்கே திருமா, கம்யூனிஸ்ட்கள் இடையே ஏற்படும் பிசகுகளை இலகுவாக கையாண்டு உன்மையில் பூரிக்கச் செய்தீர்கள்.ஆனால்!!! என்னவாயிற்று நீங்கள் நால்வர் மட்டும் போதாதா 7 சதவிகித ஓட்டுக்காகவா இப்படி ஒரு முடிவினை எடுத்துவிட்டீர்கள் ?? உங்களை மட்டும் சொல்லவில்லை பழுத்த அரசியல் ஞானம் கொண்ட ராமகிருஷ்ணன் தா பாண்டியன் நல்லக்கண்ணு ஆகியோருக்கும் ஒரு சேர மதி மழுங்கியது தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட சனியின் பலனோ என எண்ணத் தோன்றுகிறது. உச்சகட்டமாக கேப்டன் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்த போது உங்கள் ஆதரவாளர்களை நினைத்துப் பார்த்தீர்களா?? நான் பல சந்தர்ப்பங்களில் படித்துள்ளேன் நீங்கள் மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறீர்களென அதே இடத்தில் பல விவகாரத்தில் பணத்திற்காக விலை போனீர்களெனவும் படித்து உள்ளேன். இன்று உங்களை அஇஅதிமுகவின் B team என அழைக்கின்றனர் அதை கேட்க வந்த சேனலிடம் பதில் சொல்லாமல் பேட்டியை cancel செய்கிறேன் என எழுந்து செல்கிறீர்கள்!!! அப்படியெனில் அவர்கள் கூறுவது உன்மை போல் ஆகிவிடாதா?? கலைஞரை ஜாதியைக் கொண்டு தூற்றிவிட்டு அம்மா சத்தியமா நான் அவரை அந்த எண்ணத்துடன் கூறவில்லை என்கிறீர்கள்.நான் அறிந்த அரசியல் வாதிகளில் நாகரீகத்துடன் நீங்கள் விளங்குவீர்கள் என எண்ணினால் அதில் மணல் அள்ளித் தூற்றிவிட்டீர்கள்!!! உங்கள் கட்சியோ நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தேய்ந்து வருகிறது அதை கவனத்தீர்களா?? ஆரம்பத்தில் இருந்த உங்கள் தம்பிகள் இப்போதில்லை!!! அனைவரும் விலை போய்விட்டனர் என்று சிறுபிள்ளை விளக்கம் தரமாட்டீர்கள் என எண்ணுகிறேன். முதலில் கேப்டன் புராணம் பாடாது அவரை வி(ர)ட்டிடுங்கள். கரைபடியா கைகளை கொண்டு கட்சியை வளருங்கள் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறுங்கள். உங்கள் மீதான மரியாதை என்றும் எனக்குள் நீடிக்கும். எம் எல் ஏ வாக வாழ்த்துக்கள்!!!!

ஜாதிக்கட்சி ஜாதி அரசியல் செய்பவர்கள் என்ற பெயர் இருந்தாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாகவே திகழ்கிறது பாமகவும் மருத்துவர்களும். உன்மையில் இவர்களிடம் திட்டங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இவர்கள் கூறுவதைக் கேட்க அத்துனை நம்பிக்கை வரும் ஆனால் மறுநாள் அவை நீடிப்பதில்லை. தமிழகத்தை அமெரிக்க மாகாணங்கள் போல ஆக்குவேன் ,படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் ,நானொரு மருத்துவன் எனக்கு நாட்டின் நோய்கள் எதென தெரியும் அதற்கான மருந்துகள் என்னிடம் மட்டுமே உள்ளது என்று பேசும் போதெல்லாம் சிலிர்க்கத் தான் செய்கிறது ஆனால் ஒருபுறம் எங்கே களவரங்களை தூன்றி ஆதாயங்கள் தேடியே மக்களுக்குள் வெறியைத் தூன்றிவிடுவீரோ என்ற ஐயம் மாம்பழச் சின்னம் அருகில் இருக்கும் buttonஐ அழுத்தவிடாமல் தடுக்கிறது. ஐயா நீங்கள் மட்டும் ஜாதி அரசியல் செய்யவில்லை எல்லோரும் செய்யத்தான் செய்கிறார்கள் ஆனால் இவ்வளவு படித்த நீங்களே செய்தால் நீங்கள் படித்த படிப்பிற்கு என்ன பயன்?? வீணாகாதா?? அதிலும் நீங்கள் செய்வது பளீரென வெளியே தெரிகிறது வேண்டாமையா விட்டுவிடுங்கள். நீங்கள் முதவ்வராக வாழ்த்துக்கள். அப்படி ஆகிவிட்டால் தயவு செய்து நீங்கள் கூறிய கல்வி முறை மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.

இதுவரை போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வென்று எம் எல் ஏ வாக திகழும் கலைஞர் கருணாநிதி அவர்களே!!!! என்னதான் நீங்கள் பிரம்மாண்ட ஆட்சிகள் நடத்தியிருந்தாலும் உங்கள் கடந்த ஆட்சி அப்பப்பா !!! என்று உங்களை கோபாலபுரத்துக்கு அனுப்புவோம் என ஆகிவிட்டது. சென்ற இடமெல்லாம் ஊழல் தொட்டதற்கு எல்லாம் லஞ்சம் உங்கள் குடும்பத்தார் செய்த சுற்றிவளைப்பெல்லாம் யாரும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். உங்கள் மீதிருந்த அபிமானங்கள் எல்லாம் சீரழிந்தன. பிரதான எதிர்கட்சி பதவியும் பறிபோனது. நாடாளுமன்ற தேர்தலோ இன்னும் மோசம். உங்களை எத்தனை தொண்டர்கள் நெஞ்சில் வைத்து ஆராதித்தனர் குடும்பத்திற்காக அனைத்தையும் இழந்துவிட்டீர்களே அய்யா??!!! இன்னமும் தமிழ் இனத் தலைவர் என நீங்களே எப்படி அழைத்துக் கொள்ள சொல்கிறீர்கள்?? மக்கள் மன்றத்தில் உங்கள் சாயம் வெளுத்ததால் தானே இத்தனை நாட்கள் அமைதி காக்கின்றீர்கள்?? ஸ்டாலின் இப்போது ஊர் ஊராக சென்று ஓட்டு கேட்கும்போதெல்லாம் கடந்த ஆட்சியில் நடந்த தவறை மன்னியுங்கள் என்று கூறும் அவலம் வந்தது யாரால்??எதனால்??. நீங்களும் பால் பழம் கதை கூறி,புறா விடு தூது , நாரை விடு தூது என துண்டுச்சீட்டு வரை மன்றாடி தேமுதிகவிடம் கூட்டணிக்காக கேட்கிறீர்கள் கேவலம் பதவிக்காகவா?? கேப்டன் வரவில்லை என்றவுடன் கட்சியை உடைக்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபடுகின்றனர் உங்கள் கட்சியினர்.அண்ணா வளர்த்த கட்சியை இந்த நிலைக்கு கொணார்ந்த பெருமை உங்களையே சேரும். போதும் தலைவரே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் இன்னும் ஆசைப்பட்டால் இன்னும் இன்னும் கேவலம் வந்த சேரும். இதற்குமேலும் உங்கள் பதவி மோகம் ஆட்சிக் கட்டிலில் சேர்க்கும் என எண்ணி போட்டியிட்டு அதனாலேயே முதல்வரானால் தயவு செய்து குடும்பத்தை விடுத்து தொண்டர்களுக்காக உங்களை நம்பி வாக்களித்த அந்த ஏழை வாக்காளனுக்காக சேவை செய்யுங்கள் அய்யா!!! வாழ்த்துகள்.

அடுத்து

தமிழகத்தை பச்சை பசேலேன ஆக்கி திரும்பும் இடமெல்லாம் banner கலாச்சாரம் கொண்டு வந்த பேனர்த்தாரகை செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களே!!!! ஒரு பெண்ணாக இத்துனை தைரியம் வைராக்கியம் துணிச்சல் அடேங்கப்பா!!!! ஆனால் அவை நியாயத்திற்கு செயல்பட்டனவா??? நீங்கள் தப்பு செய்து சிறை சென்று வந்த பொழுதும் உங்களுக்கு கிடைத்த ஆதரவு யாருக்கு கிடைக்கும்??? இவ்வளவு அபிமானம் கொண்ட மக்களை நீங்கள் வெள்ள சமயத்தில் கைவிட்டுவிட்டீர்களே அம்மா?? ஒப்புக் கொள்கிறேன் இலவச பஸ் சேவை அவசர கூட்டங்கள் வெள்ள நிவாரண பணிகள் எல்லாம் நடந்தன ஆனால் ஆமை வேகத்தில்!! அட்டூழியங்களின் உச்சமாக உங்கள் sticker boys செய்ததை வைத்தே எதிர் தரப்பு ஆதாயம் பார்த்துவிடும். தமிழகத்திற்கு குடி தான் குலதொழில் எனவும் டாஸ்மாக் தான் குலதெய்வமெனவும் மாற்றியது தங்கள் ஆட்சியின் பெருமையா அம்மா?? இந்த மதுவால் நீங்கள் கொணார்ந்த அம்மா நல திட்டங்கள் சிறப்பிழந்துள்ளது. பெண்களுக்காக எனதாட்சி என்ற உங்களால் பல பெண்கள் தாலி இழந்து போனார்கள் தாயே !!!! 6500 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் உள்ளன தாயே நியாய விலைக்கடைகள் கூட அவ்வளவு இல்லை இங்கு!!!டாஸ்மாக்கை மூட கோறி ஏக திசைகளிலும் களேபரங்கள் நடந்தன. அப்போதெல்லாம் மவுனம் காத்தீர்கள் இப்போது தேர்தலுக்காக மது விலக்கு கொண்டு வரப்படுமென கூறுகிறீர்கள் நியாயமா??? இதை 2015 விடுதலை தின பேச்சில் கூறியிருந்தால் எதிர் தரப்பிற்கு வாயில்லாமல் போகச் செய்திருக்கலாம். மக்களும் உங்களை ஆராதனை செய்திருந்திருப்பர். நீங்கள் செய்யவில்லையே அம்மா? ஆட்சி நடத்த பணம் இல்லாமல் போய்விடுமென பயமா?? முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்கள் அதனால் வேலை அதிகரித்தபாடில்லை ??? மந்திரிகளை பந்தாடுவதில் காட்டிய வேகத்தை தமிழக வளர்ச்சியில் காட்டியிருக்தலாம். ஆட்சியில் பல நற்பலன்கள் இருந்த போதும் அதைச் சொல்லி உங்களால் மீண்டும் ஓட்டு கேட்க முடியுமா?? சின்ன சின்ன தவறுகள் என நினைக்கும் அத்துனையும் ஒரு நாள் பெரியதாக விடியும் நீங்கள் பூதக்கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள். உங்கள் கட்சி உங்கள் கண் அசைவில் உள்ளது போன்ற யூகத்தை தோற்று வைத்துள்ள நீங்கள் ஏன் வெள்ள சமயத்தில் மவுனம் காத்தீர்கள்?? தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுக்காகவே காத்துக்கிடக்கிறது கோடநாடு சென்றுவிடுங்கள். உங்கள் சொத்து வழக்கிற்கு வாழ்த்துக்கள்.... உங்கள் தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்...

ஐம்பதாண்டு காலமாக மாறி மாறி ஆட்சியமைத்து வரும் திராவிட கட்சிகளே நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் நாவழுகிவிடும். என்னற்ற திட்டங்கள் பலன் தரும் திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். இன்னும் 14,000 கிராமங்கள் மின்சாரமின்றி இந்தியாவில் தவிக்கின்றன புண்ணியமாக தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட அந்த லிஸ்டில் இல்லை தார் ரோடு இல்லாமல் 27000 கிராமங்கள் இந்நியாவில் உள்ளன அவை தமிழ்நாட்டில் சில நூறு மட்டுமே அவ்வாறு உள்ளன. என்னதான் கல்வித்தரம் குறைவாக இருந்தாலும் அதன் சதவிகிதத்தை அதிகரித்தீர்கள் ஒரு வேளை மக்களுக்கு கொஞ்சம் அறிவிருந்தால் போதும் இல்லயேல் நம்மை பந்தாடிவிடுவர் என தரத்தை ஆண்டுக்காண்டு கீழிறக்குகிறீர்களோ என்னவோ!!! இதைப் போல பல இருக்கின்றன. எனினும் உங்களுடைய குடும்ப மற்றும் நண்பர் குடும்ப நலனை பேண நீங்கள் செய்த துரோகங்களும் ஏராளம். அதே போல உங்களை எதிர்த்து மூன்றாம் அணி அமையாமல் பார்த்துக் கொண்டீர்கள் அதில் பொன் விழாவும் கண்டுவிட்டீர்கள். இருந்தால் நீ இல்லையேல் நான் நமக்கு அடுத்து யாரும் இருக்கக்கூடாதென அத்துனை இணக்கமா உங்களுக்குள்??!! அன்று மறுமலர்ச்சி திமுக வைகோ (இன்னும் மலரவிடவில்லை) முதல் இன்று தேமுதிக விஜயகாந்த் வரை சிதரடிக்கிறீர்களே நியாயமா!!!

ஆனால் இதை எல்லாம் சத்தமின்றி எமது தலைமுறை பார்த்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஒரு கோடி பேர் புதிதாக சட்டமன்ற தேர்தலுக்கு ஒட்டிட உள்ளோம். இனியும் மக்களை ஏமாற்ற எண்ணாதீர்கள் அப்படி நினைத்தால் ஏமாந்து போவீர்கள். காசுக்காக இலவசத்திற்காக நாங்கள் எங்களது ஓட்டை கொடுப்பதில்லை.எங்கள் தொகுதியில் யார் திறம்பட செயல்படுவார் என எண்ணிப்பார்த்த பிறகே வாக்களிப்போம். அரசியல் கட்சிகளே கடைசியாக ஒரு எச்சரிக்கை இப்போது கூட 11நாட்கள் உள்ளன வேட்பு மணு தாக்கல் செய்ய. 234 தொகுதிகளிலும் நன்கு தேர்ந்த தகுதியான வேட்பாளரை நிறுத்துங்கள். ரவுடிகள் ஜாதிக் காரர்கள் என எந்த குலைக்கும் ஜீவிகளுக்கு எங்கள் ஓட்டில்லை!!!!!

#நோட்டா ஜாக்கிரதை😂😂

அனைத்து கட்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் _/|\_

அனைவரும் வாக்களிப்பீர் காசுக்கல்ல பரிசுக்கல்ல குவாட்டர் பிரியாணிக்கல்ல ஜாதி மத பாசத்திற்கல்ல இலவசத்திற்குமல்ல

நியாயத்திற்கு!!!!

வாக்களிப்பது நம் கடமை!!!! மறவாதீர்.

 
 
 

Comments


bottom of page